கமல்ஹாசன் இப்போது இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்து ஹெச் வினோத், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன் பிறகு நாயகன் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படி பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தையும் இப்போது சுறுசுறுப்பாக்கியுள்ளார். அடுத்தடுத்து சிம்பு, சிவகார்த்திகேயன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளார்.
ஆனால் நீண்டகாலமாக ஒரு நடிகரின் கால்ஷீட்டுக்காக கமல் முயன்று வருகிறார். அது வேறு யாரும் இல்லை. நடிகர் விஜய்தான். ஆனால் இத்தனை நாளாக அதைக் கண்டுகொள்ளாமல் இருந்த விஜய், இப்போது கமலுக்காக மனமிறங்கி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அட்லி இயக்கும் படத்தில் நடித்த பின்னர் அடுத்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸுக்கு கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.