பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி பல நடிகர், இயக்குனர்கள் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் ஏ ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், விஷால், நானி போன்ற பிரபலங்கள் தன்னை படவாய்ப்புக்காக பயன்படுத்தி ஏமாற்றியதாக ஆதாரத்தோடு நிரூபித்து அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும், சில வருடங்களுக்கு முன் தன்னை பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தருவதாக தெரிவித்து தன்னுடைய வாழ்க்கையை சீரழித்து ஏமாற்றினார்கள் என்று ஊடகங்கள் முன் புகார் கொடுத்தார். மேலும், புகாரளித்தது மட்டுமில்லாமல் ஆடையை கழட்டி பொது இடத்தில் போராடவும் செய்தார்.

இதில் தமிழ் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த லிஸ்ட்டில் இருந்துள்ளதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார். இதன்மூலம் கோலிவுட்டில் பிரபலமான நடிகை ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து முருகதாஸ், விஷால் ஆகியோரை தாக்கி பேசி பேட்டிக் கொடுத்து பிரபலம் ஆனார். சமீபத்தில் கூட ஜெகன் மோகன் தோற்றால் நான் நிர்வாணமாக பீச்சில் நடப்பேன் என அவர் சொன்னதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அதை அவர் மறுத்தார்.

இப்படி எதாவது சர்ச்சைகளுக்குள்ளேயே அவர் வாழ்வதால் அவரை யுடியூப் சேனல்கள் சுற்றி வட்டமடிக்கின்றன. அந்தவகையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் அதிர்ச்சியான ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “ஒரு இயக்குனர் படம்பற்றி பேசவேண்டும் என ஹோட்டலுக்கு வர சொன்னார். நானும் சென்றேன். அவசரமாக கிளம்பியதால் சாப்பிடாமல் சென்றுவிட்டேன்.

அங்கு சென்றதும் அந்த இயக்குனர் என்னை அட்ஜஸ்ட் செய்ய சொன்னார். நானும் அவருக்கு இணங்கினேன். எல்லாம் முடிந்ததும் எனக்கு சாப்பாடு கூட வாங்கித் தராமல் அவர் சென்றுவிட்டார். செல்லும் போது பயன்படுத்திய ஆணுறையை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றார்” எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த இயக்குனர் யார் என்பதைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. இவர் சொல்வதெல்லாம் உண்மையா இல்லை அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக கண்டதையும் சொல்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.