Monday, May 19, 2025
Home > Cinema > பிரின்ஸ் டிரைலர்… ப்ரமோட் செய்த இரண்டு நடிகர்கள்…  நெகிழ்ந்த சிசகார்த்திகேயன்

பிரின்ஸ் டிரைலர்… ப்ரமோட் செய்த இரண்டு நடிகர்கள்…  நெகிழ்ந்த சிசகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

`

அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதனால் ஒவ்வொரு படத்துக்கும் அவரின் மார்க்கெட் மதிப்பு ஏறிக்கொண்டே வந்தது. இந்நிலையில் அவர் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், மரியா, சத்யராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

```
```

இந்த படத்தின் டிரைலர் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை பெற்ற இந்த டிரைலரை பாராட்டி விஜய் தேவரகொண்டா மற்றும் சிம்பு ஆகிய இருவரும் ட்வீட் செய்து பாராட்டினர். அவர்கள் இருவருக்கும் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்து ட்வீட் செய்தார்.

பிரின்ஸ் அக்டோபர் 21 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து வரும் நிலையில் இந்த படத்தை ரிலீஸுக்கு முன்பே 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகவும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் மற்றும் விஜய்க்கு பிறகு இந்த சாதனையை சிவகார்த்திகேயன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.