Tuesday, April 22, 2025
Home > Cinema > “உங்க மார்பகத்த பெருசாக்கும் ஆப்பரேஷன் பண்ணிக்குங்க…” சுற்றியுள்ளவர்களால் டார்ச்சர் செய்யப்பட்ட சமீரா ரெட்டி… அவரே பகிர்ந்த தகவல்!

“உங்க மார்பகத்த பெருசாக்கும் ஆப்பரேஷன் பண்ணிக்குங்க…” சுற்றியுள்ளவர்களால் டார்ச்சர் செய்யப்பட்ட சமீரா ரெட்டி… அவரே பகிர்ந்த தகவல்!

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவர்ச்சி பதுமையாக தோன்றியவர் சமீரா ரெட்டி. ஆனால் அவருக்கு வேறொரு பரிணாமத்தைக் கொடுத்தது வாரணம் ஆயிரம் திரைப்படம். இந்த படத்தில் அவர் சூர்யாவுக்கு ஜோடியாக மேக்னா என்ற பெண்ணாக நடித்திருந்தார்.

ஹோம்லியான அந்த கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்த படத்தில் அவர் பாதியிலேயே இறந்துவிட்டாலும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தார்.

அந்த படத்தின் வெற்றியால் அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டானார். அஜித்தின் அசல், விஷாலின் வெடி என அவர் பல படங்களில் நடித்தாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. மீண்டும் அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த ‘நடுநிசி நாய்கள்’ நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் அதன் பின்னர் அவருக்கு இறங்குமுகமாக அமைந்தது.

`

அவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் பெரிதாக வெற்றி படங்களாக அமையாத நிலையில் அவர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆர்வமாக இருந்து வரும் அவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படம் மற்றும் ரீல்ஸ்களை பகிர்ந்து வருகிறார். அதில் தன்னுடைய இயற்கையான அழகோடு வெள்ளை முடியோடு இருக்கும் புகைப்படங்களை எல்லாம் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஹெல்த் டிப்ஸ் கொடுத்து வருகிறார்.

```
```

இந்நிலையில்தான் அவர் ஒரு அதிர்ச்சிகரமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் சினிமாவில் நடித்த போது என்னை மார்பக அழகு அறுவை சிகிச்சை செய்துகொள்ள சொன்னார்கள். என்னை சுற்றியுள்ளவர்களே “எல்லோரும் அந்த அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். நீயும் செய்துகொள் என்றார்கள். ஆனால் நான் உறுதியாக இருந்து அதை மறுத்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

சமீபகாலமாக நடிகைகள் மூக்கை அழகாக்குவது, உதட்டை அழகாக்குவது, மார்பகத்தைப் பெரிதாகக் காட்டும் அறுவை சிகிச்சை மற்றும் இடுப்புப் பகுதியைப் பெரிதாக்கும் அறுவை சிகிச்சை என பல சிகிச்சைகளை செய்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.