Tuesday, May 12, 2026
Home > Cinema > பிக் பாஸ் மாயா கிருஷ்ணன் ஒரு ஓரின சேர்க்கையாளர் !! என்னை  பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக்கொண்டார்- மாடல் நடிகையின் புகார்!

பிக் பாஸ் மாயா கிருஷ்ணன் ஒரு ஓரின சேர்க்கையாளர் !! என்னை  பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக்கொண்டார்- மாடல் நடிகையின் புகார்!

மாயா சுந்தர கிருஷ்ணன் ஒரு இந்திய நடிகை, விளம்பர நடிகை மற்றும் தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் கல்லூரி இசைத் திரைப்படமான வானவில் வாழ்க்கை (2015) திரைப்படத்தில் அறிமுகமானார். மாயா தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் பிறந்தார். இவர் மதுரை டிவிஎஸ் லட்சுமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் பெங்களூரு அம்ரிதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார்.

ஜேம்ஸ் வசந்தனின் வானவில் வாழ்க்கையில் அறிமுகமானபோது, மாயா நாடகத்திலிருந்து திரையுலகிற்கு நகர்ந்தார், “டிவாய்ட் ஆப் எக்ஸைட்மென்ட்” மற்றும்  மற்றும் “எ வேஸ்டட் எபோர்ட்” என்ற நாடகக்ங்களில் ஒரு பாடகராக நடிப்பதற்கு தனது முடியை வெட்ட வேண்டியிருந்தது. தொடரி படத்தில் பத்திரிகை நிருபராக நடித்தார், மேலும் துருவ நட்சத்திரம், 2.0, மகளிர் மட்டும் மற்றும் சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்களில் அவரின் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது. தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் அவரை பற்றி பிரபல மாடல் அனன்யா ராம்பிரசாத் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை பாலியல் ரீதியாக புகார் கூறியது இப்போது வைரல் ஆகிவருகிறது.

இதுபற்றி அனன்யா “நான் என்னுடைய 18 ஆவது வயதில்மாடலிங்கில் நுழைந்த போது எனக்கு வழிகாட்டியாக மாயா இருந்தார். எனக்கு நல்ல அறிவுரைகளை  வழங்கினார். ஆனால் ஒரு கட்டத்தில் என்னை என் நண்பர்களிடம் இருந்து பிரித்து அவருடன் மட்டும்தான் பழகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளினார்.

என் எல்லா முக்கியமான முடிவுகளையும் அவரே எடுத்து என்னை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டார். என்னை பாலியல் ரீதியாக படுக்கையில் சீண்டியுள்ளார். எனக்கு தவறான எண்ணத்தில் முத்தம் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் நான் தவறான ஆளுடன் இருப்பதை உணர்ந்து அவரிடம் இருந்து விலகிவிட்டேன்” எனக் கூறியுள்ளார். இப்போது மாயா பிக்பாஸ் மூலமாக பிரபலமடைந்துள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு மீண்டும் வைரல் ஆகிவருகிறது.