சைத்ரா ரெட்டி இவர் ஒரு தமிழ் சீரியல் நடிகை. இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த தொடர் இப்போது பிரபலமாக உள்ளது.

1993 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர் சைத்ரா ரெட்டி. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்த இவர் . மாடலிங் துறையில் ஈடுபட துவங்கினார்.


முதல் முறையாக 2017 ஆம் ஆண்டு ஒரு கன்னட சீரியலில் நடித்தார். பின்னர் யாரடி நீ மோகினி என்ற தொடரில் தமிழில் நடித்தார். மேலும் 3 திரைப்படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார் சைத்ரா ரெட்டி.

குறிப்பாக வலிமை திரைபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா ரெட்டி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

