தீபாவளி பண்டிகையை ஒட்டி தொலைக்காட்சி நிறுவனங்கள் ரசிகர்களைக் கவர புதுப்படங்களை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளன.
தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் புதுப்படங்கள் வெளியாவது ஒரு பக்கம் இருந்தாலும், தற்போது தொலைக்காட்சியிலும் புத்தம் புதிய படங்களை ஒளிபரப்ப உள்ளன முன்னணி தொலைக்காட்சிகள். முன்பெல்லாம் படம் ரிலீஸாகி ஒரு வருடம் கழித்து அல்லது 6 மாதம் கழித்துதான் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் சூட்டோடு சூடாக 6 மாதங்களுக்குள் தொலைக்காட்சிக்கு படங்கள் வந்துவிடுகின்றன. அந்தவகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒளிபரப்பாக பெரிய படங்கள் என்னவென்று பார்ப்போம்.
சன் டிவியில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோல விஜய் தொலைக்காட்சியில் இந்த ஆண்டின் மிகெப்பெரிய ஹிட்டான கம்லஹாசனின் விக்ரம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜி தமிழில் வலிமை அல்லது ஆர்யா நடித்த கேப்டன் திரைப்படம் ஒளிபரப்பப் படும் என தெரிகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் தீபாவளிக்கு ரசிகர்கள் சேனல் மாற்றி சேனல் மாற்றி புதுப்படங்களைப் பார்த்து மகிழலாம்.