விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. 1999 ஆம் ஆண்டு பிறந்த கேப்ரில்லா. இளம் வயது முதலே நடிப்பில் ஆர்வம் காட்டி வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சி மூலம் முதல் முறையாக அறிமுகமானார் கேபி. அதன் பின் 7C என்ற தொடரில் இளம் நட்சத்திரமாக நடித்திருந்தார்.

கேப்ரில்லா முதல் முறையாக 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் தங்கையாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைக்கவே. பின்னர் சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்திருந்தார்.

2016 ஆம் ஆண்டு வெளியான அப்பா படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. என்ன தான் 3 படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.


பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கு அந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது. பிக் பாஸ் தொடரில் இறுதி வரை இருந்த கேப்ரில்லா . மக்கள் மத்தியில் பிரபலமானார்.


பிக் பாஸ் தொடரில் இருந்து வெளியேறிய பின்னர் சீரியல் வாய்ப்பு தேடி வரவே அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார் கேப்ரில்லா.


இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 தொடரில் முக்கிய கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கேப்ரில்லா தொடருந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.









Summary In English: Gabriella Charlton is an Tamil actress. Gabriella Charlton was born on 1999 . Gabriella Charlton became famous after entering Bigboss . Gabriella Charlton is Now acting in a Lead role on Vijay tv serial Eeramaana rojave 2 serial. Gabriella Charlton photos go viral sometimes. Some of the photos of Gabriella Charlton are for you in this Article.