யுட்யூப்பில் ஆஹா கல்யாணம் என்ற தொடரில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளைஞர்களைக் கவரும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்த இந்த தொடர் குறிப்பாக 2கே கிட்ஸ் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அதன் பின்னர் அயோக்யா, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துத் தலைகாட்டியவர் எப்போது ஹீரோயினாக நடிப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.

பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிய சென்ற இவர், அந்த படத்தில் சிலக்கம்மா என்ற வேடத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு காட்சியில் ஆடைகள் இன்றி அவர் நடித்ததால் அவரின் வேடம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அவரின் காட்சி எந்த ஆபாசமும் இல்லாமல் உருவாக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இரவின் நிழல் படத்தில் நடித்தது பற்றி பேசிய பிரிகிடா “உண்மையில் நான் அந்த படத்தில் நடிக்க செல்லவேயில்லை. துணை இயக்குனராக பணியாற்றதான் பார்த்திபன் சாரிடம் வாய்ப்புக் கிடைத்தது. அந்த நடிகைக்கான தேர்வில் நான் பொறுப்பேற்றிருந்தேன். திடீரென ஒரு நாள் பார்த்திபன் சார் என்னையே அந்த வேடத்தில் நடிக்க சொன்னார்.

அந்த காட்சியில் ஆடையின்றி அமர்ந்திருக்கும் போது இந்த காட்சியை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என பயந்தேன். ஆனால் படத்தின் கதையோட்டமும், ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசையும், அந்தபெண்ணின் மேல் ரசிகர்களுக்கு பரிதாப உணர்வைதான் ஏற்படுத்தியது. ” என கூறியுள்ளார்.
