Friday, March 29, 2024
Home > செய்திகள் > லட்சங்களில் சம்பளம்..! யாரந்த இருவர்..? சவுக்கு செய்த காமெடி..!

லட்சங்களில் சம்பளம்..! யாரந்த இருவர்..? சவுக்கு செய்த காமெடி..!

22-2-22/11.20am

சென்னை : தமிழகத்தில் துறைரீதியான அனுபவமோ அதற்கான புரிதலோ இல்லாதவர்களை அந்த துறையின் வல்லுநர் என அழைப்பது திராவிட சிந்தனை என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர். உதாரணமாக துணை நடிகராக சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றிய மயில்சாமி திடீரென பொருளாதார வல்லுனராக உருவெடுத்தார்.

அதேபோல (…)பத்திரிக்கை நடத்தி வரும் நக்கீரன் கோபால் அரசியல் நிபுணராகவும் அரசியல் விமர்சகராகவும் முன்னிறுத்தப்படுகிறார். கோபால் முன்னாள் ஆளுநர் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் தனது பத்திரிக்கையில் விமர்சித்திருந்தார். ஆதாரம் இருக்கிறதா என கேள்விகேட்க குற்றம் கூறுவது மட்டுமே எங்கள் வேலை. குற்றம் செய்யவில்லை என ஆதாரத்தை நீங்கள் கொடுங்கள் என மிகமிக சாதுரியமாக பேசி தப்பினார். மேலும் ஆளுநர் குறித்த பதிவுக்கு அடுத்த சில வாரங்களில் மன்னிப்பும்கோரினார்.

இப்படியான திராவிட சூழலில் புதிதாக வதந்தியை கிளப்ப வந்தவர் சவுக்கு. இவர் பேசுவதெல்லாம் உண்மைக்கு புறம்பானவை மட்டுமல்ல. சமூகத்தில் நிலவும் நல்லிணக்கத்தை குழைக்கும்படியாகவும் அமைந்திருக்கும். இந்நிலையில் பிஜேபி ஐடி விங்கில் முக்கிய புள்ளியாக இருக்கும் கிருஷ்ணகுமார் முருகன் மற்றும் செல்வகுமார் ஆகியோருக்கு பிஜேபி மாதாமாதம் 3லட்சம் சம்பளம் வழங்குவதாய் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

`

சவுக்கு கூறிய இருவரும் பிஜேபி ஆதரவாளர்கள். ஆனால் இருவரும் சுயதொழில் புரிவோர்கள் அதுவும் மென்பொருள் துறை இளம்தொழிலதிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

```
```

தமிழக மக்களை முட்டாளாக்க சவுக்கு போல சிலர் முயல்வதாகவும் மக்கள் இவர்களை போன்றோரிடம் கவனமாக இருக்கவேண்டும் என்றும் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா