Thursday, March 28, 2024
Home > செய்திகள் > முற்றுகிறது ஆஸ்திரேலியா சீனா மோதல்..!!

முற்றுகிறது ஆஸ்திரேலியா சீனா மோதல்..!!

2018 ல் சீனா நிறுவனமான ஹுவாயை தடை செய்தது ஆஸ்திரேலியா. அதற்க்கு பதிலடியாக ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பார்லே ஒயின் மற்றும் திராட்சைகளுக்கு இறக்குமதி வரியை உயர்த்தியது சீனா.

இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலிய கருவூல அதிகாரி ஜோஷ் பிரைடேன் பெர்க் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ” நாட்டில் சீனாவின் வியாபார ஆதிக்கத்தை வேண்டிய சூழலில் உள்ளோம். சீனா நம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வேலைகளில் ஈடுபடுகிறது. கோவிட் தொற்றினால் 2 ட்ரில்லியன் மதிப்பிலான பங்கு சந்தை வர்த்தகம் தேக்கமாகியுள்ள நிலையில்,

`

சீனா கடந்த 12 மாதங்களில் 19.4 ட்ரில்லியன் மதிப்பிலான ஏற்றுமதி வர்த்தகத்தில் சாதனை படைத்துள்ளது. இது சற்றே உற்று நோக்க வேண்டிய விஷயம். ஏற்றுமதி இறக்குமதியில் தற்போது தள மயமாக்கல் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கு மிக உதவும்.” என தெரிவித்தார்.

```
```

மேலும் சீனாவில் கொரோனா எங்கிருந்து பரவியது என்பதை விசாரிக்க ஆஸ்திரேலிய தனி விசாரணைக்குழு ஒன்றை சீனாவுக்கு அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.