சமந்தா “myositis என்ற உடல் நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். இதுபற்றி பதிவிட்ட அவர் “நான் பாதிக்கப்பட்டேன். இதிலிருந்து குணமானதும் அதை தெரிவிக்கலாம் என நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை அதிக நாட்கள் தேவைப்படுகிறது.

உங்கள் அன்பே என்னுடைய ஒவ்வொரு கடினமான நாளையும் எதிர்கொள்ள உதவுகிறது. எனது மருத்துவர்கள் நான் முழுமையாக குணமாகிவிடுவேன் என உறுதியாக இருக்கிறார்கள். உடல்ரீதியாகவும் உணர்ச்சிபூர்வமாகவும், எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் அமைந்துள்ளன. ஆனால் நான் இப்போது குணமாவதற்கு அருகில் உள்ளதாக நம்புகிறேன். இதுவும் கடந்து போகும்” எனக் கூறி இருந்தார்.

இதற்காக வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்ற சமந்தா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் இந்தியா திரும்பி தன்னுடைய சகுந்தலம் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

அதையடுத்து வரிசையாக தன்னுடைய அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துகொண்டு வருகின்றார். அந்த வகையில் இப்போது மெல்லிய கண்ணாடி போன்ற புடவையணிந்து லோ நெக் ஜாக்கெட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் ஹிட்டான நிலையில் தன்னுடைய சக நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் சில ஆண்டுகளிலேயே முறிந்தது. இருவரும் விவாகரத்து செய்து இப்போது தங்கள் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
