தெலுங்கு திரையுலகில் நடித்து வந்தாலும் மொழி தாண்டியும் இஷா ரெப்பாவை பாப்புலர் ஆக்கியது அவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்தான். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு மற்றும் அவ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஈஷா ரெப்பா. அதிலும் அவ் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

அந்த படத்தில் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியை அடுத்து இப்போது தெலுங்கில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தெலுங்கு திரையுலகை தாண்டியும் இன்ஸ்டாகிராம் மூலமாக பிரபலம் ஆகிவருகிறார்.

இன்றைய நவீன காலத்தில் நடிகைகளுக்கு மொழி எல்லையே இல்லாமல் போய் விட்டது. நடிகைகள் குறிப்பிட்ட மொழிகளில் நடித்தாலும், அவர்கள் சமூகவலைதளம் மூலமாக அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றனர். அப்படி மொழி தாண்டியும் ரசிகர்களைக் கவர்பவதான் இஷா ரெப்பா.

பொதுவாக ஆண் நடிகர்களைவிட பெண் நடிகர்கள் தங்கள் உடல் அழகைப் பேணுவதில் தீவிர அக்கறைக் காட்டி வருகின்றனர். அந்த வகையில் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவரான ஈஷா, தன்னுடைய உடல்பயிற்சி வீடியோக்கள் மற்றும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இப்படி போட்டோக்களாக போட்டு, தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை லட்சக்கணக்கில் பெருக்கியுள்ளார் இஷா ரெப்பா. இந்நிலையில் டைட்டான உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள மிரர் செல்பி போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.




