Monday, May 11, 2026
Home > Cinema > அமலா பால் இரண்டாவது திருமணம்… வைரலாகும் கல்யாண போட்டோஸ்!

அமலா பால் இரண்டாவது திருமணம்… வைரலாகும் கல்யாண போட்டோஸ்!

அமலா பாலின் சினிமா  வாழ்க்கை நேர்க்கோடாக இல்லாமல் ஏற்ற இறக்கத்தோடுதான் எப்போதும் இருந்துள்ளது. மைனா மூலம் பிரேக் பெற்ற அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். அதன் பின்னர் ஏற்பட்ட சறுக்கலில் மார்க்கெட்டை இழந்து காணாமல் போனார்.

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும், அமலா பால் 2010 ஆம் ஆண்டு  வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்த படத்தில் வித்தார்த்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதினை வென்றார் அமலா பால்.

பின்னர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை மைனா படத்திற்காக பெற்றார். அதன் பின்னர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தெய்வத்திருமகள்,வேட்டை காதலில் சொதப்புவது எப்படி,விஜய் நடிப்பில் தலைவா போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.

இவர் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். அதன் பின்னர் பாலிவுட் பிரபலம் ஒருவருடன் காதலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் சிறப்பான இடங்களுக்கு செல்லும் திறமை இருந்தும் சறுக்கி இன்று வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் அமலா பால்.

2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடை படத்தில்  நி ர் வா ணமாக சில காட்சிகளில் நடித்திருந்தார். கடந்த வருடம் வெளிவந்த குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்திலும் நடித்திருந்தார். இப்போது அவருக்கு கைவசம் இந்தியில் வெளியாக உள்ள போலா படம் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் சில மாதங்களாக ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து வந்த அமலா பால் இப்போது அவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவருகின்றன.